ADDED : மார் 24, 2025 05:55 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார், கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் உள்ள ராட்சத குழாய் மூலம் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தேரிருவேலி விலக்கு ரோடு தனியார் மேல்நிலைப்பள்ளி அருகே காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கால்வாயில் சென்று வீணாகிறது. சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. எனவே குழாயை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.