/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சிவன் கோயில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்சிவன் கோயில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்
சிவன் கோயில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்
சிவன் கோயில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்
சிவன் கோயில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்
ADDED : ஜன 04, 2024 02:04 AM

சாயல்குடி: -சாயல்குடியில் கைலாசநாதர் கோயில் தெப்பக்குளத்தை அப்பகுதி தன்னார்வலர்கள் இணைந்து குப்பையை அகற்றி, தண்ணீர் நிரம்ப வழிவகை செய்துள்ளனர்.
சாயல்குடியில் கைலாசநாதர் கோயில் தெப்பக்குளத்தில் 3 ஏக்கரில் நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாயல்குடி பாசன பெரிய கண்மாய் நிரம்பி வந்த நிலையில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரத்து இன்றி அடைபட்டது.
இதனை அறிந்த தன்னார்வலர்கள் வரத்து கால்வாயை சீரமைத்து கோயில் தெப்பத்தில் நீரை முழுவதுமாக தேக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சூழ்ந்திருந்த பச்சை பாசி மற்றும் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பையை தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து அகற்றினர்.
சாயல்குடியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கூறியதாவது: சிவன் கோயில் தெப்பக்குளத்தில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நீராடுகின்றனர்.
தெப்பக்குளத்தை பாதுகாக்கும் பொருட்டு சுற்றிலும் முள்வேலி அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் மது அருந்துவதை தடுக்க போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என்றனர்.