ADDED : ஜூன் 30, 2025 04:58 AM
கமுதி : கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயம் அருகே உள்ள தியான அறையில் பா.ஜ., கமுதி தெற்கு ஒன்றியம் சார்பில் மனதின் குரல் நிகழ்ச்சி நடந்தது.
பொறுப்பாளர் கதிரவன், மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகநாதன், மாவட்ட துணைத்தலைவர் கணபதி முன்னிலை வகித்தனர். அப்போது மனதின் குரல் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் கமுதி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாட்டினை தெற்கு ஒன்றிய தலைவர் வேலவன் செய்தார்.