/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/உண்டு உறைவிடப் பள்ளியில் தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி உண்டு உறைவிடப் பள்ளியில் தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
உண்டு உறைவிடப் பள்ளியில் தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
உண்டு உறைவிடப் பள்ளியில் தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
உண்டு உறைவிடப் பள்ளியில் தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
ADDED : ஜூன் 24, 2024 01:58 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் போகலுாரில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் போகலுாரில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் அவஷ்ய வித்தியாலய உண்டு உறைவிடப்பள்ளியில் நடந்த தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அருண்நேரு தலைமை வகித்தார்.
மேனேஜிங் டிரஸ்டி மாடசாமி இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் ராஜேஸ்வரி, இளம் தொழில் நெறியாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேஸ்வரி பேசியதாவது: மாணவர்கள் கட்டாயம் இடை விடாது கல்வி கற்க வேண்டும். கற்பதினால் வேலை வாய்ப்பு பெற முடியும். அனைவரும் உயர் கல்வி பயில வேண்டும், என்றார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அருண் நேரு பேசியதாவது: ஆசிரியர்கள், மாணவர்களின் செயல்பாடுகள் ஒழுக்க நெறிகள் எங்களை மிகவும் கவர்ந்தது. இளம் சிறார்கள் கல்வி கற்க வேண்டும். அடிப்படை கல்வி முதல்,உயர் கல்வி வரை பயின்று உயர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் பூபதி, புஷ்பவள்ளி, ஜெயசுதா, திவ்யா, அனுசுயா, அன்னலட்சுமி ராமாராணி பங்கேற்றனர்.-----