/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கோடரேந்தல் பகுதியில் காய்ச்சல் பாதிப்பால் கிராமமக்கள் அச்சம்கோடரேந்தல் பகுதியில் காய்ச்சல் பாதிப்பால் கிராமமக்கள் அச்சம்
கோடரேந்தல் பகுதியில் காய்ச்சல் பாதிப்பால் கிராமமக்கள் அச்சம்
கோடரேந்தல் பகுதியில் காய்ச்சல் பாதிப்பால் கிராமமக்கள் அச்சம்
கோடரேந்தல் பகுதியில் காய்ச்சல் பாதிப்பால் கிராமமக்கள் அச்சம்
ADDED : ஜன 30, 2024 11:30 PM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கோடரேந்தல் கிராமத்தில் காய்ச்சலால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோடரேந்தல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு கால்நடை வளர்ப்பு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த சில நாட்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோடரேந்தல் ஜோஸ் விக்டர் கூறியதாவது:
கோடரேந்தல் பகுதியில் ஏராளமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பரமக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அவ்வப்போது சிகிச்சை பெறுகின்றனர். காய்ச்சல் பரவுவதால் அக்கம் பக்கத்தினரும் பீதி அடைந்துள்ளனர்.
எனவே சுகாதாரத் துறையினர் கிராமத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து கிராம மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்க வேண்டும் என்றார்.