/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை அரசு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை
அரசு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை
அரசு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை
அரசு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 23, 2025 11:33 PM

ராமநாதபுரம்: முதுளத்துார் அருகே காக்கூர் கதையா கிராம மக்கள் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவ்விடத்தில் அங்கன்வாடி மையம் கட்டித்தர வலியுறுத்தினர்.
காக்கூர் அருகே கதையா கிராம மக்கள் பலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், கதையா கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
அதே சமயம் அங்கன்வாடி மையம் சேதமடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. எனவே அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அங்கு அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டித்தர வேண்டும்.
இது தொடர்பாக எங்கள் ஊருக்கு வந்த கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகையால் புறம்போக்கு இடங்களில் உடனடியாக அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி குழந்தைகள் பயன்பெறும் வகையில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும்.
அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.