ADDED : ஜன 29, 2024 05:30 AM
திருவாடானை: தே.மு.தி.க., கட்சி நிறுவனர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கபட்டு இறந்து 30வது நாள் ஆனதை முன்னிட்டு திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் அக் கட்சியை சேர்ந்தவர்கள் மோட்சதீபம் ஏற்றினர்.
தே.மு.தி.க., திருவாடானை ஒன்றிய செயலாளர் பாலு தலைமையில் அக்கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.