Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விஜய்க்கு எந்த கோட்பாடுகளும் இல்லை வேடிக்கை காட்டும் சிங்கமாக இருக்கிறார் சீமான் பேச்சு

விஜய்க்கு எந்த கோட்பாடுகளும் இல்லை வேடிக்கை காட்டும் சிங்கமாக இருக்கிறார் சீமான் பேச்சு

விஜய்க்கு எந்த கோட்பாடுகளும் இல்லை வேடிக்கை காட்டும் சிங்கமாக இருக்கிறார் சீமான் பேச்சு

விஜய்க்கு எந்த கோட்பாடுகளும் இல்லை வேடிக்கை காட்டும் சிங்கமாக இருக்கிறார் சீமான் பேச்சு

ADDED : செப் 13, 2025 02:07 AM


Google News
ராமநாதபுரம்:த.வெ.க., தலைவர் விஜய்க்கு எந்த கோட்பாடுகளும் இல்லை, ஈ.வெ.ரா, காமராஜர், எம்.ஜி.ஆர்., பெயரை சொல்லி வருகிறார். அவர் வேடிக்கை காட்டும் சிங்கமாக இருக்கிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழ் தேசிய இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில், 'எது நமக்கான அரசியல்' என்ற தலைப்பில் கேள்வி, பதில் நிகழ்ச்சி நடந்தது.இதில் பங்கேற்ற சீமான் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசியதாவது:

விஜய்க்கு அரசியலில் எந்த கோட்பாடும் இல்லை. தற்போது இருக்கக்கூடிய அரசியல் கட்சி தலைவர்களின் கோட்பாட்டையும் தாண்டி முக்கிய கோட்பாடுகளுடன் அரசியலுக்கு வந்தால் கைதட்டி வரவேற்கக் கூடிய முதல் ஆளாக நான் இருப்பேன்.

தமிழகத்தில் இரு பெரும் அரசியல் தலைவர்களின் நிலைப்பாட்டை ஊடுருவி 1.1 சதவீதம்ஓட்டு சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதம் ஓட்டுகள் வாங்கி தனித்து நின்று அரசியல் அங்கீகாரத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.

எழுதிக் கொடுக்கும் வசனங்களை ஒரு வார காலமாக வீட்டிலிருந்து படித்து விட்டு சனிக்கிழமை மட்டுமே வெளியில் வந்து பேசுகிற நபர் விஜய். அவர் வேடிக்கை காட்ட வரும் ஒரு தலைவராக உள்ளார்.எந்த காலத்திலும் ஆண் சிங்கம் வேட்டைக்கு செல்லாது.

பெண் சிங்கம் வேட்டையாடி கொண்டு வந்து போடக்கூடிய மாமிசத்தை தான் ஆண் சிங்கம் சாப்பிடும். அது கூட தெரியாத ஒரு அரசியல் தலைவராக விஜய் உள்ளார். அவர் வேடிக்கை காட்டும் சிங்கமாக இருக்கிறார்.

மேலும் இந்தியாவின் மிகப்பெரிய கட்சி எங்கள் கட்சி தான். ஏனென்றால் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. அ.தி.மு.க., தி.மு.க., இதுவரை தனித்து நின்று 234 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளதா. விஜய் தனித்து நின்று போட்டியிடுகிறேன் என்று கூறினாரா. இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us