ADDED : மே 31, 2025 11:24 PM

ராமநாதபுரம்: -நான் முதல்வன் திட்டத்தில் சிறந்த திறமையாளருக்கு உதவித்தொகை வழங்கும் (ஸ்கவுட்) திட்டத்தில் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக தமிழக அளவில் ஆறு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் வேதியியல் துறை 3ம் ஆண்டு மாணவி அக் ஷரா தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக அரசு சார்பில் தென்கொரியா நாட்டின் கச்சோன் மற்றும் பூஷன் பல்கலையில் ஆராய்ச்சி பயிற்சி பெற்று தமிழகம் திரும்பிய மாணவி அக் ஷராவை துணை முதல்வர் உதயநிதி பாராட்டியதோடு தனது முகநுால் தளத்திலும் மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
தென்கொரியாவில் அறிவு சார் பயிற்சி பெற்று வந்த மாணவி அக் ஷரா வை கல்லுாரி தாளாளர் செல்லதுரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.