ADDED : ஜூன் 10, 2025 01:00 AM

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் முருகன் சன்னதியில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது.
ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் பால்குடத்தை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர்.
அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க முருகனுக்கு பால் அபிேஷகம் நடந்தது.
வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது.