/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருச்செந்துாருக்கு பாதயாத்திரை வைகாசி விசாக விழா திருச்செந்துாருக்கு பாதயாத்திரை வைகாசி விசாக விழா
திருச்செந்துாருக்கு பாதயாத்திரை வைகாசி விசாக விழா
திருச்செந்துாருக்கு பாதயாத்திரை வைகாசி விசாக விழா
திருச்செந்துாருக்கு பாதயாத்திரை வைகாசி விசாக விழா
ADDED : ஜூன் 06, 2025 11:55 PM

திருப்புல்லாணி:உச்சிப்புளி அருகே சுற்றுவட்டார கிராம முருக பக்தர்கள் நடைபயணமாக திருச்செந்துார் செல்கின்றனர்.
ஜூன் 9ல் வைகாசி விசாகத்தை முன்னிட்டு உச்சிப்புளி சுற்றுவட்டார கிராம பகுதி முருக பக்தர்கள் காவடி எடுத்தும் முருகன் பக்தி பாடல்களை பஜனை செய்தும் திருச்செந்துார் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
முருக பக்தர்கள் கூறியதாவது: உச்சிப்புளி, சாத்தக்கோன்வலசை பகுதிகளில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டி பாதயாத்திரை செல்கிறோம். காலை 20 கி.மீ., இரவில் 20 கி.மீ., என பயணத்தை திட்டமிட்டபடி நடந்து சென்று வைகாசி விசாக விழாவிற்கு திருச்செந்துார் சென்றடைகிறோம்.
பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக குழுவாக சென்று வருகிறோம். ஓரிடத்தில் நிறுத்தி சமைத்து சாப்பிட்ட பிறகு பயணம் தொடர்கிறோம். உடலுக்கும் உள்ளத்திற்கும் பாதயாத்திரை புத்துணர்வு அளிக்கிறது என்றனர்.