Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வந்தடைந்த வைகை அணை தண்ணீர்; தினமலர் செய்தி எதிரொலி

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வந்தடைந்த வைகை அணை தண்ணீர்; தினமலர் செய்தி எதிரொலி

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வந்தடைந்த வைகை அணை தண்ணீர்; தினமலர் செய்தி எதிரொலி

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வந்தடைந்த வைகை அணை தண்ணீர்; தினமலர் செய்தி எதிரொலி

ADDED : ஜூலை 03, 2025 09:56 PM


Google News
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் வந்தடைந்ததால் கோடை நெல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெயர் பெற்ற ஆர். எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தேங்கி இருந்த தண்ணீர் வறட்சியாலும், கோடை விவசாயத்திற்கு பயன்படுத்தியதாலும் தண்ணீர் விரைவாக காலியானதால் பள்ளங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி இருந்தது.

இதனால் பெரிய கண்மாயில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த பாசன விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இன்றி கவலை அடைந்திருந்தனர்.

இந்நிலையில் வைகை அணையிலிருந்து ராமநாதபுரத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரை ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக வைகை ஆறு, அரசடிவண்டல் கீழ் நாட்டார் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை பெரிய கண்மாயை வந்தடைந்தது. இந்நிலையில் வைகை அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஆற்றில் வரும் உபரி நீரை முறையாக கொண்டு வந்தால் கோடை விவசாயத்திற்கு தண்ணீர் போதுமானதாக அமையும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் பெரிய கண்மாயில் மீன் ஏலம் விடப்பட்டு மீன் பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் கோடை நெல் விவசாயம் அதிகம் உள்ள பகுதி விவசாயிகள் பயனடையும் வகையிலும், மீன்பிடிப்பு பணிகள் பாதிக்கப்படாத வகையிலும், பெரிய கண்மாய் நோக்கன் கோட்டை அருகே கண்மாயின் குறுக்கே மண்ணால் தற்காலிக தடுப்பு அணை அமைக்கப்பட்டு, வைகை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us