ADDED : செப் 01, 2025 10:20 PM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பூலாங்குடி அய்யனார், செல்வ விநாயகர், ராதை கோகுல கிருஷ்ணன் கோயில் வருடாந்திர விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது.
முன்னதாக மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வட மாடு மஞ்சுவிரட்டு விழாவில் காளைகளை வீரர்கள் அடக்கி பரிசுகளை பெற்றனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் அடங்க மறுத்த காளைகளுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.