Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தமிழகத்தில் 1300 ஊராட்சி செயலாளர்கள்  காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் 

தமிழகத்தில் 1300 ஊராட்சி செயலாளர்கள்  காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் 

தமிழகத்தில் 1300 ஊராட்சி செயலாளர்கள்  காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் 

தமிழகத்தில் 1300 ஊராட்சி செயலாளர்கள்  காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் 

ADDED : மார் 20, 2025 02:20 AM


Google News
ராமநாதபுரம்:தமிழகத்தில் 1300 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. உடனடியாக நிரப்ப வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத்தலைவர் ஜான் போஸ்கோ கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்வதிலும், அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும், ஊராட்சி ஆவணங்களை பராமரிப்பதிலும், ஊராட்சி நிர்வாகங்களை நடத்துவதிலும், அரசின் வரி வருவாய் வசூலிப்பதிலும் ஊராட்சி செயலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் 1300க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. ஒரே நபர் பல ஊராட்சிகளை சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது.

இதனால் ஊராட்சி செயலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஊராட்சி செயலாளர் பணி நியமனம் ஊராட்சித்தலைவரிடம் இருந்தது. பல போராட்டங்களுக்குப்பின் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்ய கலெக்டர் தலைமையிலான குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே கால தாமதம் இல்லாமல் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us