/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பெரும்பிடுகு முத்தரையர் விழாவிற்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல் பெரும்பிடுகு முத்தரையர் விழாவிற்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்
பெரும்பிடுகு முத்தரையர் விழாவிற்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்
பெரும்பிடுகு முத்தரையர் விழாவிற்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்
பெரும்பிடுகு முத்தரையர் விழாவிற்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்
ADDED : மே 21, 2025 11:59 PM
ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஒன்றியம் சின்னாண்டி வலசை ஊராட்சிக்கு உட்பட்ட சங்கன்வலசை கிராமத்தில் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நாளை (மே 23) நடைபெற உள்ளது. இதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஊர்மக்கள் வலியுறுத்தினர்.
சங்கன்வலசை பெரும்பிடுகு முத்தரையர் நலச்சங்கம் ஊர் தலைவர் ராஜாங்கம் தலைமையில் மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது: ஆண்டு தோறும் மே 23ல் பேரரசர் முத்தரையர் சதயவிழா கொண்டாடுவது வழக்கம். ஒரு சிலரின் சதியால் 3 ஆண்டுகளாக தடை ஏற்பட்டுள்ளது.
கிராம மக்கள் ஒன்று கூடி இவ்வாண்டு மே 23 (நாளை) பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
சமூக விரோதிகள் சிலர் விழாவை நடத்தவிடாமல் தடுக்கும் வகையில் மக்களை அச்சுறுத்துகின்றனர்.
எனவே அமைதியாக சதய விழாவை கொண்டாடுவதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் ஆகியோர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.