/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரோட்டோ ஸ்டால்களை ஆய்வு செய்ய வலியுறுத்தல் பரோட்டோ ஸ்டால்களை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
பரோட்டோ ஸ்டால்களை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
பரோட்டோ ஸ்டால்களை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
பரோட்டோ ஸ்டால்களை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூன் 13, 2025 11:35 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பரம்பை ரோடு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பரோட்டோ ஸ்டால்களில் உணவு பார்சல்களுக்கு வாழை இலை பயன்படுத்தாமல் பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஹோட்டல்களில் உணவு பார்சல்களை வாழை இலையில் பார்சல் செய்து வழங்க வேண்டும். ஹோட்டல்களை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். உணவுப் பொருள்களில் செயற்கை நிறங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ஹோட்டல் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க அரசு வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில் ஆர். எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள பெரும்பாலான மாலை நேர ஹோட்டல்களில் வாழை இலை பயன்படுத்துவதில்லை. பார்சல்களுக்கும், வாழை இலை இன்றி, பரோட்டா, இட்லி, உள்ளிட்ட சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பேப்பர்களில் பார்சல் செய்து வழங்குகின்றனர்.
இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.