/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர வலியுறுத்தல் புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர வலியுறுத்தல்
புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர வலியுறுத்தல்
புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர வலியுறுத்தல்
புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர வலியுறுத்தல்
ADDED : ஜூன் 04, 2025 11:35 PM
ராமநாதபுரம்: கமுதி தாலுகா நெறிஞ்சிப்பட்டி கிராம மக்கள் தங்கள் ஊரில் அங்கன்வாடி மையம் கட்டித்தரக் கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
நெறிஞ்சிபட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் தற்போது சேதமடைந்துள்ளது. புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அரசு தரப்பில் அனுமதி வந்துள்ளது.
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரித்து புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.