/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சரஸ்வதி நகரில் பஸ் ஸ்டாப் அமைக்க வலியுறுத்தல் சரஸ்வதி நகரில் பஸ் ஸ்டாப் அமைக்க வலியுறுத்தல்
சரஸ்வதி நகரில் பஸ் ஸ்டாப் அமைக்க வலியுறுத்தல்
சரஸ்வதி நகரில் பஸ் ஸ்டாப் அமைக்க வலியுறுத்தல்
சரஸ்வதி நகரில் பஸ் ஸ்டாப் அமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 20, 2025 11:37 PM

ராமநாதபுரம் : பரமக்குடி தாலுகா வேந்தோணி அருகேயுள்ள சரஸ்வதி நகரில் உள்ள பொது இடத்தில் நாடக மேடை, பஸ் ஸ்டாப் அமைத்துதர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
சரஸ்வதி நகர் மகளிர்மன்றம் கிராம தலைவி நாகராணி தலைமையில் கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் சரஸ்வதி நகரில் பஸ் ஸ்டாப் மற்றும் நாடக மேடை இல்லை. தற்போது எம்.எல்.ஏ., எம்.பி., நிதியில் கட்டித்தர ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் பொது இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே தாசில்தார் தலைமையில் இடத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ் ஸ்டாப், நாடகமேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.