/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கனிமவளம், நிலக்கரி இருப்பு ஆய்வு பணிகளை கைவிட வலியுறுத்தல் கனிமவளம், நிலக்கரி இருப்பு ஆய்வு பணிகளை கைவிட வலியுறுத்தல்
கனிமவளம், நிலக்கரி இருப்பு ஆய்வு பணிகளை கைவிட வலியுறுத்தல்
கனிமவளம், நிலக்கரி இருப்பு ஆய்வு பணிகளை கைவிட வலியுறுத்தல்
கனிமவளம், நிலக்கரி இருப்பு ஆய்வு பணிகளை கைவிட வலியுறுத்தல்
ADDED : செப் 09, 2025 04:00 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் நடைபெற்று வரும் கனிமங்கள், நிலக்கரி இருப்புக்கான ஆய்வு செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அக்கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரம் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். இதில், திருப்புல்லாணி கிழக்கு பகுதியில் கனிமங்கள் மற்றும் லிக்னைட் நிலக்கரி படிவுகளின் இருப்பு குறித்து மண் எடுத்தல், குழிதோண்டுதல் பணி நடக்கிறது. இத்திட்டத்தை நிறுத்த வேண்டும். நிலக்கரி சுரங்கம் அமைப்பது மக்களை அப்புறப்படுத்தாமல் செய்ய முடியாது.
மேலும் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுப்படுத்தும். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காத தமிழக அரசு, நிலக்கரி சுரங்க திட்டங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதிக்க கூடாது உடனடியாக லிக்னைட் நிலக்கரி ஆய்வு பணிகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், ஆதித் தமிழர் கட்சியின் தென்மண்டல செயலாளர் பாஸ்கரன், பெரியார் பேரவை நாகேஸ்வரன், இந்திய கம்யூ., தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பங்கேற்றனர்.