/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பனையடியேந்தலில் ஊருணி நீரை சுத்திகரிப்பு செய்யும் திட்டம் துவக்கம் மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டம் பனையடியேந்தலில் ஊருணி நீரை சுத்திகரிப்பு செய்யும் திட்டம் துவக்கம் மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டம்
பனையடியேந்தலில் ஊருணி நீரை சுத்திகரிப்பு செய்யும் திட்டம் துவக்கம் மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டம்
பனையடியேந்தலில் ஊருணி நீரை சுத்திகரிப்பு செய்யும் திட்டம் துவக்கம் மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டம்
பனையடியேந்தலில் ஊருணி நீரை சுத்திகரிப்பு செய்யும் திட்டம் துவக்கம் மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டம்
ADDED : மே 13, 2025 07:42 AM
கீழக்கரை; திருப்புல்லாணி ஒன்றியம் பனையடியேந்தல் கிராமத்தில் ரெடிங்டன் பவுண்டேஷன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு மேலாண்மை நிதியின் சார்பில் திருப்புல்லாணி வாஷ் இன்ஸ்டியூட் நிறுவனத்துடன் இணைந்து பொதுமக்களுக்கான நீர் ஆதாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பனையடியேந்தலில் உள்ள ஊருணியில் நீரை முறையாக சுத்தம் செய்து, கிருமிகள் நீக்கப்பட்ட துாய்மையான குடிநீரை 12 ஆயிரம் லி., கொள்ளளவில் உள்ள சின்டெக்ஸ் தொட்டி 3 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
சுய உதவி குழுக்களின் மூலம் 24 மணி நேரம் கிராம மக்களே இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊருணி நீரை சுத்திகரிப்பு செய்து பொது மக்களுக்கு வழங்கும் கட்டமைப்புக்கான நிகழ்ச்சி துவக்க விழா நடந்தது. ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜு மனோகரன் தலைமை வகித்தார். ரெடிங்டன் பவுண்டேஷன் கார்ப்பரேட் சமூக பொறுப்பு தலைவர் ஹேமந்த் முன்னிலை வகித்தார். வாஷ் இன்ஸ்டிடியூட் இயக்குநர் ஆறுமுகம் காளிமுத்து வரவேற்றார். முன்னாள் ஊராட்சி தலைவர் லதா வெள்ளி பங்கேற்றனர்.