/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/உயர்கல்வி தொடர முடியாமல் தொண்டி மாணவிகள் தவிப்பு உயர்கல்வி தொடர முடியாமல் தொண்டி மாணவிகள் தவிப்பு
உயர்கல்வி தொடர முடியாமல் தொண்டி மாணவிகள் தவிப்பு
உயர்கல்வி தொடர முடியாமல் தொண்டி மாணவிகள் தவிப்பு
உயர்கல்வி தொடர முடியாமல் தொண்டி மாணவிகள் தவிப்பு
ADDED : ஜன 28, 2024 04:33 AM
தொண்டி : தொண்டியில் அரசு பெண்கள் கலைக்கல்லுாரி இல்லாததால் மாணவிகள் உயர் கல்வி தொடர முடியாமல் தவிக்கின்றனர்.
தொண்டி பேரூராட்சியை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பள்ளி இறுதிப்படிப்பை முடித்த பிறகு உயர்கல்வி கற்க திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதனால் போக்குவரத்து செலவு அதிகமாகிறது. அதிலும் பெண்களை வெளியூருக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் இப்பகுதி மாணவிகள் உயர்கல்வி கற்பது கேள்விக்குறியாக உள்ளது. தொண்டி மக்கள் நல வளர்ச்சி சங்க தலைவர் சுலைமான் கூறியதாவது:
தொண்டி பகுதியில் விவசாயிகள், மீனவர்கள், கூலி வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். பெண்களை உயர்கல்வி கற்க வெளியூர் அனுப்ப வேண்டியுள்ளது. இதனால் மாணவிகள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது.
இதனால் பெரும்பாலான மாணவிகள் உயர்கல்வி படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சிரமத்தை போக்க தொண்டியை மையமாக வைத்து பெண்கள் அரசு கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும். தொண்டியில் அழகப்பா பல்கலை சார்பில் கடலியில் துறை இயங்கி வருகிறது.
அங்கு முழு நேர பெண்கள் அரசு கலைக் கல்லுாரி இயங்க அழகப்பா பல்கலைக்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தி அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.