Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இரு மாதம் சம்பளம் நிறுத்தம்; கோயில் ஒப்பந்த ஊழியர்கள் அவதி

இரு மாதம் சம்பளம் நிறுத்தம்; கோயில் ஒப்பந்த ஊழியர்கள் அவதி

இரு மாதம் சம்பளம் நிறுத்தம்; கோயில் ஒப்பந்த ஊழியர்கள் அவதி

இரு மாதம் சம்பளம் நிறுத்தம்; கோயில் ஒப்பந்த ஊழியர்கள் அவதி

ADDED : ஜூன் 12, 2025 11:00 PM


Google News
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஒப்பந்த ஊழியர்களுக்கு 2 மாதம் சம்பளம் வழங்காததால் அவதிப்படுகின்றனர்.

ராமேஸ்வரம் கோயிலில்துாய்மை பணிக்கு பத்மாவதி எனும் தனியார் நிறுவனம் மூலம் 105 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளம் தலா ரூ.10,500 முதல் ரூ.12 ஆயிரம் வரை ஹிந்து அறநிலையத்துறை தனியார் நிறுவனத்திடம் வழங்குகிறது. இந்நிறுவனம் ஊழியர்கள் வங்கி கணக்கில் சம்பளத்தை வழங்குகிறது.

இந்நிலையில் ஏப்., மே மாதம் சம்பளத்தை நேற்று வரை வழங்காமல் கோயில் நிர்வாகம் நிறுத்தியது. இதனால் சம்பளத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அன்றாட குடும்பச் செலவு, குழந்தைகளின் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து தனியார் நிறுவன அதிகாரி கூறுகையில், ஒப்பந்த ஊழியர்களின் பெயர், ஆதார் விவரப்பட்டியலை விரிவாக புதிய கோயில் இணை ஆணையரிடம் வழங்கிட தாமதம் ஆனது. இதனால் 2 மாதம் சம்பளம் வரவில்லை. ஓரிரு நாட்களில் சம்பள பணம் வர உள்ளதால் விரைவில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us