/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மீன் லாரி- டூவீலர் மோதல் விவசாயிகள் இருவர் பலி மீன் லாரி- டூவீலர் மோதல் விவசாயிகள் இருவர் பலி
மீன் லாரி- டூவீலர் மோதல் விவசாயிகள் இருவர் பலி
மீன் லாரி- டூவீலர் மோதல் விவசாயிகள் இருவர் பலி
மீன் லாரி- டூவீலர் மோதல் விவசாயிகள் இருவர் பலி
ADDED : செப் 19, 2025 03:22 AM
சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மீன் ஏற்றி வந்த லாரி மோதியதில் டூவீலரில் சென்ற இரண்டு விவசாயிகள் பலியாயினர்.
சாயல்குடி அருகே எம்.கரிசல்குளத்தை சேர்ந்த விவசாயி வேல்மயில் 48. இவர் சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கக்கூடிய பந்தயங்களில் மாட்டு வண்டி ஓட்டுபவர். நேற்று மாலை 5:30 மணிக்கு சாயல்குடியில் இருந்து கமுதி சாலை வழியாக வேட கரிசல்குளம் பஸ் ஸ்டாப் விலக்கில் டூவீலரை ஓட்டிச் சென்றார். வெள்ளாம்பல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனியாண்டி 50, பின்புறம் அமர்ந்திருந்தார்.
இவர்களது டூவீலரின் மீது மீன் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் வேல்மயில், முனியாண்டி இடது காலில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். லாரி டிரைவர் மூக்கையூர் அருகே கன்னிகாபுரியை சேர்ந்த அந்தோணி செபஸ்டின் 33, மீது சாயல்குடி போலீசார் வழக்குப்பதிந்தனர்.