/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம் போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
ADDED : மே 26, 2025 02:41 AM
ராமநாதபுரம்: -தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. கடைசியாக 2025 பிப்., 13 ல் பேச்சு வார்த்தை நடந்தது.
அதன் பிறகு அரசு சார்பில் நடவடிக்கை இல்லாததால் நுாறு இடங்களில் மே 27 ல் (நாளை) பணிமனை முன்பாக உண்ணா விரதம் இருக்க சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., டி.டி.எஸ்.எப்., போன்ற தொழிற் சங்கங்கள் அறிவிப்பு செய்திருந்தன.
இந்நிலையில் மே 29 ல் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் நாளை உண்ணாவிரதத்தை ரத்து செய்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.