/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோவை வேளாண் பல்கலையில் உச்சிபுளி விவசாயிகளுக்கு பயிற்சி கோவை வேளாண் பல்கலையில் உச்சிபுளி விவசாயிகளுக்கு பயிற்சி
கோவை வேளாண் பல்கலையில் உச்சிபுளி விவசாயிகளுக்கு பயிற்சி
கோவை வேளாண் பல்கலையில் உச்சிபுளி விவசாயிகளுக்கு பயிற்சி
கோவை வேளாண் பல்கலையில் உச்சிபுளி விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : செப் 20, 2025 11:38 PM

ராமநாதபுரம்,: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இயற்கை வேளாண்மை குறித்து ராமநாதபுரம் அருகே உச்சிபுளி விவசாயிகளுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் முரளி அர்த்தநாரி, பேராசிரியர்கள் ராமசுப்பிரமணியன், சுகந்தி, ஜானகி, கவினோ ஆகியோர் விவசாயிகளுக்கு இயற்கை பண்ணையத்தின் அங்ககங்களான நன்மை செய்யும், தீமை செய்யும் பூச்சிகளை கண்டறிதல், பூச்சி விரட்டி கரைசல் 3ஜி தயாரிப்பு முறை மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.
மண்டபம் வட்டார விவசாயிகள் பண்ணைய முறையில் பயிரிடப்பட்ட காய்கறி, பழங்களை பார்த்தனர். பயிற்சி ஏற்பாடுகளை உச்சிபுளி வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் சோனியா ஆகியோர் செய்தனர்.