/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இல்லம் தேடி கல்வி வட்டார கருத்தாளர்களுக்கான பயிற்சி இல்லம் தேடி கல்வி வட்டார கருத்தாளர்களுக்கான பயிற்சி
இல்லம் தேடி கல்வி வட்டார கருத்தாளர்களுக்கான பயிற்சி
இல்லம் தேடி கல்வி வட்டார கருத்தாளர்களுக்கான பயிற்சி
இல்லம் தேடி கல்வி வட்டார கருத்தாளர்களுக்கான பயிற்சி
ADDED : ஜூன் 23, 2025 11:35 PM
ராமநாதபுரம்: இல்லம் தேடி கல்வி கருத்தாளர்களுக்கான வட்டார அளவிலான ஒருநாள் பயிற்சி ராமநாதபுரம் ஒருங்கணைந்த பள்ளிக்கல்வி கூட்ட அரங்கில் நடந்தது. பயிற்சியை உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் துவக்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி வரவேற்றார்.
மாவட்ட கருத்தாளர்களான லியோன், சிவக்குமார் ஆகியோர் பங்களிப்புடன் பயிற்சியை வழி நடத்தினர். எண்ணும், எழுத்தும் முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு கற்பிப்பது குறித்தும் இல்லம் தேடி கல்வி செயலி குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
கருத்தாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் தலைமையில் வேல்சாமி மற்றும் மாவட்ட முதன்மை தன்னார்வலர் இலக்கியா ஆகியோர் செய்திருந்தனர்.