ADDED : மார் 24, 2025 06:11 AM
திருவாடானை: திருவாடானை அருகே கட்டவிளாகம் விருசுழி ஆற்றில் மணல் திருடுவதாக தகவல் கிடைத்தது. மங்களக்குடி குரூப் வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, வி.ஏ.ஓ. மகாலிங்கம் மற்றும் அலுவலர்கள் சென்று ஆய்வு செய்தனர்.
அவர்களை கண்டதும் மணல் திருடர்கள் தப்பி சென்றனர். மணல் திருட்டுக்கு பயன்படுத்திய டிராக்டரை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.