ADDED : மார் 21, 2025 05:53 AM
கமுதி : கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரியில் அதானி சோலார் மின் உற்பத்தி நிலையம் சார்பில் மாணவிகள் பயன்பாட்டிற்காக ரூ.12 லட்சத்தில் புதிய கழிப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
முதல்வர் தர்மர் தலைமை வகித்தார். சோலார் நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் வினோத் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் ஜனார்த்தனன் செய்தார். உடன் மனிதவளத்துறை அலுவலர் மகேந்திரமணி, முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.