Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கலெக்டர் அலுவலகத்தில் வீல்சேர், பேட்டரிகார் வசதி இருக்கு.. ஆனா இல்லீங்க...

கலெக்டர் அலுவலகத்தில் வீல்சேர், பேட்டரிகார் வசதி இருக்கு.. ஆனா இல்லீங்க...

கலெக்டர் அலுவலகத்தில் வீல்சேர், பேட்டரிகார் வசதி இருக்கு.. ஆனா இல்லீங்க...

கலெக்டர் அலுவலகத்தில் வீல்சேர், பேட்டரிகார் வசதி இருக்கு.. ஆனா இல்லீங்க...

ADDED : ஜூலை 02, 2024 06:25 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதிநகரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. பழைய, புதிய கலெக்டர் அலுவலக கீழ்தளம், மேல் தளத்தில் கலெக்டர் அலுவலகம், டி.ஆர்.ஓ., கூடுதல் கலெக்டர், துணை கலெக்டர்கள், தேர்தல் பிரிவு, மக்கள் தொடர்பு மையம், முதன்மை கல்வி அலுவலகம், மகிளா நீதிமன்றம், ஆதார் புகைப்பட மையம், இ-சேவை மையம், மத்திய கூட்டுறவு வங்கி உள்ளன.

இதுபோக வளாகத்தில் விளையாட்டு அரங்கம், மாவட்ட ஒருந்கிணைந்த நீதிமன்றம், வேளாண் இணை இயக்குனர் அலுவலகம், மீன்வளத்துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம். எஸ்.பி., டி.ஐ.ஜி., அலுவலகம் என பல்வேறு துறை அலுவலகங்கள் தனித்தனியாக உள்ளன. இதனால் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

வாரந்தோறும் திங்கள் அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வசதிக்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் முதல் அலுவலகம் வரை இலவசமாக பேட்டரி கார் இயக்கப்படுகிறது. இதுபோக அலுவலகங்களுக்கு செல்ல வீல்சேர்களும் உள்ளன.

ஆனால் இவை பெயரளவில் பயன்படுத்தப்படுவதால் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.

நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த சில மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு நடந்தும், தவழ்ந்தும் சென்று மனு அளித்தனர்.

அபிராமம் உடையநாதபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி அ. சப்பாணி கூறுகையில், வாகன வசதியின்றி தவழ்ந்து வருகிறேன். எனக்கு மூன்று சக்கர சைக்கிள் கேட்டு மனு அளிக்க வந்துள்ளேன். ஏற்கனவே வழங்கிய சைக்கிள் பழுதாகிவிட்டது.

ஊக்கத்தொகை ரூ.2000 வழங்க வேண்டும். பலமுறை மனு அளித்தும் பலனில்லை. கலெக்டர் உதவி செய்ய வேண்டும் என்றார்.

மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் நாட்களில் வீல்சேர், பேட்டரி கார்களை முழு நேரமும் இயக்க வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us