/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மகப்பேறு பிரிவில் காத்திருப்பு கூடம் இல்லாததால் அவதி மகப்பேறு பிரிவில் காத்திருப்பு கூடம் இல்லாததால் அவதி
மகப்பேறு பிரிவில் காத்திருப்பு கூடம் இல்லாததால் அவதி
மகப்பேறு பிரிவில் காத்திருப்பு கூடம் இல்லாததால் அவதி
மகப்பேறு பிரிவில் காத்திருப்பு கூடம் இல்லாததால் அவதி
ADDED : மே 31, 2025 11:13 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு கட்டடத்தில் காத்திருப்பு கூடம் இல்லாததால் நோயாளிகளின் உறவினர்கள் கட்டட வாசலில் அமர்ந்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு, பிரசவ வார்டு உட்பட 5 தளங்களை கொண்ட கட்டடம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவும் செயல்பட்டு வருகிறது. பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களுடன் வரும் உதவியாளர்கள் அவசரத்தில் எந்த பொருட்களையும் எடுக்காமல் வந்து விடுகின்றனர். நோயாளிக்கு ஒரு உதவியாளர் மட்டுமே வார்டுகளில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் உதவியாளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே கட்டடத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
இதன் காரணமாக நோயாளிகளின் உறவினர்கள் வந்தால் அவர்களுக்கான காத்திருப்பு கூடம் இல்லாதாதல் மகப்பேறு பிரிவு வாசல் பகுதியில் நெருக்கடியில் அமர்ந்து காத்திருக்கும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
மழைக்காலங்களில் கட்டட வாசல்களில் அமர முடியாத நிலை ஏற்படுகிறது. மகப்பேறு பிரிவு வார்டு பகுதியில் பொதுமக்கள் காத்திருப்பு கூடம் அமைத்து தர ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் முன் வர வேண்டும்.