/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி பஸ்களில் தொடரும் திருட்டு பரமக்குடி பஸ்களில் தொடரும் திருட்டு
பரமக்குடி பஸ்களில் தொடரும் திருட்டு
பரமக்குடி பஸ்களில் தொடரும் திருட்டு
பரமக்குடி பஸ்களில் தொடரும் திருட்டு
ADDED : மார் 21, 2025 06:35 AM
பரமக்குடி : பரமக்குடி டவுன் பஸ்களில் பைகளில் வைத்திருக்கும் பொருட்களை குறி வைத்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பயணிகள் உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்ள போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் உட்பட ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம், வைகை நகர், எமனேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பஸ் ஸ்டாப்கள் உள்ளன. இதன்படி நுாற்றுக்கணக்கான கிராமப் பகுதிகளை உள்ளடக்கி பரமக்குடி நகராட்சியில் வணிகம் நடக்கிறது.
தினமும் பரமக்குடிக்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொழில் மற்றும் வியாபாரம், பள்ளி, கல்லுாரிகள் என வந்து செல்கின்றனர். இவர்கள் பஸ்களில் பயணிக்கும் போது கைப்பைகளில் விலை உயர்ந்த நகை மற்றும் பணம் என கொண்டு செல்ல நேரிடுகிறது.
இது போன்றவர்களை சிலர் குறி வைத்து பைகளில் உள்ள பர்ஸ்கள் மற்றும் டூவீலர்களில் வைக்கும் பணத்தை குறி வைத்து திருடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். வைகை நகர் பகுதி பஸ் ஸ்டாப்பில் இருந்து மட்டும் கடந்த சில மாதங்களில் ஐந்திற்கு மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.
பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் நகைகளை தங்களது கழுத்திலோ அல்லது பணம் போன்ற பொருட்களை பஸ்களில் கீழே வைக்காமல் கவனமாக வைத்திருக்க வேண்டும். பயணிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.