ADDED : மார் 18, 2025 06:51 AM
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ள திருவாசகத்தில் 51 பதிகங்கள் உள்ளன. அதில் உள்ள 658 பாடல்களை திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தை சேர்ந்த சிவனடியார்கள், முருகேசன், கவிதா ஆகியோர் காலை முதல் மாலை வரை பாடி இறைவனை வழிப்பட்டனர்.