/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பாலம் உடைந்ததால் கடலில் விழுந்த கிரேன்பாலம் உடைந்ததால் கடலில் விழுந்த கிரேன்
பாலம் உடைந்ததால் கடலில் விழுந்த கிரேன்
பாலம் உடைந்ததால் கடலில் விழுந்த கிரேன்
பாலம் உடைந்ததால் கடலில் விழுந்த கிரேன்
ADDED : பிப் 11, 2024 01:14 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில், 22.76 கோடி ரூபாயில் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்துவதற்கான ஜெட்டி பாலம் கட்டும் பணிகள், 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில், மீத பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.
கட்டுமானத்திற்கான தளவாட பொருட்கள் எடுத்துச் செல்ல, கடற்கரையில் இருந்து பாராங்கற்களை பயன்படுத்தி பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
இதற்காக, 40 ஆண்டுகள் பழமையான பாலத்தில், கிரேன் ஒன்றை நிறுத்தி வைத்து, பாராங்கற்களை துாக்கி வைத்தனர். அப்போது பாரம் தாங்காமல் பழமையான பாலம் இடிந்தது.
இதில், கிரேன் கடற்கரையில் விழுந்து சேதமடைந்தது. இதை மற்றொரு கிரேன் வாயிலாக மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.