ADDED : ஜூன் 07, 2025 12:00 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை ரண பத்ரகாளியம்மன் கோயில் 43ம் ஆண்டு வைகாசி விசாக விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் ஜூன் 10ல் பொங்கல் விழா நடக்கிறது.
அதைத் தொடர்ந்து மறுநாள் முளைப்பாரி ஊர்வலம், பூக்குழி விழாவும் நடைபெற்று ஜூன் 12ல் நடைபெறும் 108 திருவிளக்கு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.