/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பதவி உயர்வுக்கு பணி விதியில் திருத்தம் தமிழக பட்டதாரி ஆசிரியர் சங்கம் நன்றிபதவி உயர்வுக்கு பணி விதியில் திருத்தம் தமிழக பட்டதாரி ஆசிரியர் சங்கம் நன்றி
பதவி உயர்வுக்கு பணி விதியில் திருத்தம் தமிழக பட்டதாரி ஆசிரியர் சங்கம் நன்றி
பதவி உயர்வுக்கு பணி விதியில் திருத்தம் தமிழக பட்டதாரி ஆசிரியர் சங்கம் நன்றி
பதவி உயர்வுக்கு பணி விதியில் திருத்தம் தமிழக பட்டதாரி ஆசிரியர் சங்கம் நன்றி
ADDED : ஜன 07, 2024 04:13 AM

திருப்புல்லாணி; பதவி உயர்வுக்கு பணி விதியில் திருத்தம் செய்யப்பட்டதையடுத்து அரசுக்கு தமிழக பட்டதாரி ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்தது. சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கூறியதாவது:
தொடக்கக் கல்வித் துறையில் பணி விதிகளை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து சில காலமாக தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கை வைத்திருந்தோம்.
இதன் தொடர்ச்சியாக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளி கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் உள்ளிட்ட உயரதிகாரிகளை சந்தித்து சென்னையில் மனு அளிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி 1983ல் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க கல்வித்துறையில் உருவாக்கப்பட்ட சார்நிலைப்பணி விதிகளை தற்போது தான் சார்நிலை பணி விதிகளை மாற்றி அரசாணை எண்: 243 வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஏறக்குறைய 19 ஆண்டு காலம் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு இன்றி பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வழி வகுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்ற பணி விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அரசாணை எண்: 243 வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.