Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டில்லியில் பா.ஜ., தலைவர்களுடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சந்திப்பு

டில்லியில் பா.ஜ., தலைவர்களுடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சந்திப்பு

டில்லியில் பா.ஜ., தலைவர்களுடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சந்திப்பு

டில்லியில் பா.ஜ., தலைவர்களுடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சந்திப்பு

ADDED : செப் 20, 2025 11:34 PM


Google News
திருவாடானை: ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் டில்லியில் துணை ஜனாதிபதி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் லியோ ஜெரால்டு எமர்சன் கூறினார்.

அவர் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி 2 ஆண்டுகளில் 'டெட்' தேர்ச்சி பெற வேண்டும். இதனால் நாடு முழுவதும் பல லட்சம் ஆசிரியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலையை இழக்க நேரிடும் என்பது வேதனையான விஷயமாக இருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் சார்பில் சில நாட்களுக்கு முன்பு டில்லியில் பா.ஜ., அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள முக்கிய தலைவர்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு சார்ந்து இந்தியா முழுவதிலும் ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், மத்திய கல்வி அமைச்சர் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சரியான கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us