ADDED : மார் 18, 2025 10:53 PM

ஆர்.எஸ்.மங்கலம், : கோடை மழை கைகொடுத்ததை தொடர்ந்து உழவுப் பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்த பின் வயல்களில் உழவுப் பணிக்கு ஏற்ற ஈரப்பதம் இல்லாததால் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தேவிபட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உழவு செய்ய முடியாத நிலையில் இருந்தது. கடந்த வாரம், வெப்பச் சலனம் காரணமாக மாவட்டம் முழுவதும் கோடை மழை பெய்தது. கோடை மழையை பயன்படுத்தி ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை சுற்றுப்புற பகுதி விவசாயிகள் உழவுப் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். சில பகுதிகளில் எள், பருத்தி, சிறுதானிய பயறு விதைப்பு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், மண் வளம் மேம்படும் என்பதால் கோடை உழவு பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர் என்றனர்.