/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஏமாற்றி கர்ப்பிணியாக்கியதால் தீக்குளித்து தற்கொலை ஏமாற்றி கர்ப்பிணியாக்கியதால் தீக்குளித்து தற்கொலை
ஏமாற்றி கர்ப்பிணியாக்கியதால் தீக்குளித்து தற்கொலை
ஏமாற்றி கர்ப்பிணியாக்கியதால் தீக்குளித்து தற்கொலை
ஏமாற்றி கர்ப்பிணியாக்கியதால் தீக்குளித்து தற்கொலை
ADDED : மார் 25, 2025 07:23 AM
ராமநாதபுரம் : -திருமணம் செய்வதாக ஏமாற்றி 4 மாத கர்ப்பிணியாக்கியதால் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே காச்சான் கிராமத்தை சேர்ந்தவர் கலைமோகன் 30. விவசாயியான இவருக்கு மனைவி சந்தியா,இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகள் ரித்திகா 21, என்பவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரை 4 மாத கர்ப்பிணியாக்கியுள்ளார்.
திருமணம் செய்ய மறுத்துவிட்டதால் நேற்று காலை ரித்திகா தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். மாரிமுத்து புகாரில் நயினார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.