/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ரயில்வே பாலத்தின் கீழ் சேதமடைந்த ரோட்டில் அவதிரயில்வே பாலத்தின் கீழ் சேதமடைந்த ரோட்டில் அவதி
ரயில்வே பாலத்தின் கீழ் சேதமடைந்த ரோட்டில் அவதி
ரயில்வே பாலத்தின் கீழ் சேதமடைந்த ரோட்டில் அவதி
ரயில்வே பாலத்தின் கீழ் சேதமடைந்த ரோட்டில் அவதி
ADDED : ஜன 20, 2024 04:28 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் பணி 5 ஆண்டுகளாகியும் முடியவில்லை. இந்த பாலத்தின் கீழ் அமைக்கப்பட்ட தற்காலிக ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இங்குள்ள ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் அவசரத்திற்கு 6 கி.மீ., சுற்றிச்செல்வதை தவிர்க்க மேம்பாலம் கட்டும் பணி துவங்கி 5 ஆண்டுகளாகியும் இதுவரை முடிக்கப்படவில்லை. பாலத்தின் கீழே அமைக்கப்பட்ட தற்காலிக ரோடும் சேதமடைந்து பல இடங்களில் குண்டும் குழியுமாகியுள்ளது.
புழுதி பறப்பதால் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மழை பெய்தால் இந்த ரோட்டை பயன்படுத்த முடியவில்லை. குறிப்பாக சேதுநகர் பகுதியில் தெருவிளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரத்தில் விபத்து அபாயம் உள்ளது.
எனவே பாலம் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அதுவரை தற்காலிக ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


