ADDED : செப் 01, 2025 10:11 PM
திருவாடானை : திருவாடானையிலிருந்து வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை சார்பில் மாணவிகள் மதுரைக்கு இயற்கை வேளாண்மை குறித்து கல்வி சுற்றுலா விற்கு அழைத்து செல்லபட்டனர்.
திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 100 மாணவிகள் இந்த கல்வி சுற்றுலாவிற்கு சென்றனர். வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் சுப்பிரமணியன், பண்ணையம் செய்யும் முறைகள், அதன் முக்கியத்துவம் பயன்கள் பற்றி விளக்கி பேசினார்.
அங்ககப் பண்ணையத்தில் ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் பூசப்பட்ட மரபணு மாற்றம் செய்யபட்ட விதைகளை பயன்படுத்த கூடாது என பேசப்பட்டது.
இணை பேராசிரியர் சுரேஷ், தேன் வளர்க்கும் முறைகள், தேனீ வகைகள் குறித்து பேசினார். மாணவிகளை பல்வேறு இடங்களுக்கு நேரடியாக அழைத்து சென்று இயற்கை விவசாய முறைகள் குறித்து காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குநர் தினேஷ்வரி செய்திருந்தார். தொழில் நுட்ப மேலாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.