/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாலை நேரத்தில் அரசு டவுன் பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை மாலை நேரத்தில் அரசு டவுன் பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை
மாலை நேரத்தில் அரசு டவுன் பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை
மாலை நேரத்தில் அரசு டவுன் பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை
மாலை நேரத்தில் அரசு டவுன் பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 18, 2025 11:33 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வசதிக்காக மாலை நேரத்தில் அரசு டவுன் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்துார் அருகே காக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குமாரகுறிச்சி, கருமல், மருதகம், அரப்போது, ராமலிங்கபுரம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி செல்வதற்கு அரசு டவுன் பஸ் வசதி இல்லாததால் முதுகுளத்துாரில் இருந்து ராமநாதபுரம் செல்லும் புறநகர் பஸ்சில் மாணவர்கள் கூடுதல் பணம் செலவு செய்து வீட்டிற்கு செல்லும் அவலநிலை உள்ளது.
இதனால் தினந்தோறும் மாணவர்கள் அதிக செலவு செய்யும் நிலை உள்ளது. இதையடுத்து மாணவர்களின் வசதிக்காக மாலை நேரத்தில் முதுகுளத்துாரில் இருந்து தேரிருவேலி வரை இலவச பஸ் பாசில் செல்ல வசதியாக அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.