/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மாணவர்கள் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்மாணவர்கள் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 07, 2024 04:08 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் தாட்கோ உதவியுடன் ஓ.என்.ஜி., ஆப்பரேட்டர் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த பத்தாம் வகுப்பு முடித்த 18 முதல் 24 வயதுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இப்பயிற்சி காலம் 6 மாதம் 15 நாட்கள். மேலும் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்குதேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால்தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
இதனை பயன்படுத்தி தனியார் தொழிற் சாலைகளில் வேலை வாய்ப்பு பெற்று ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை பெறலாம். பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பயிற்சி கட்டணத்தை தாட்கோ வழங்கும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.