/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பள்ளியில் மாணவர் அலைபேசி பயன்படுத்த தடை பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் பள்ளியில் மாணவர் அலைபேசி பயன்படுத்த தடை பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்
பள்ளியில் மாணவர் அலைபேசி பயன்படுத்த தடை பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்
பள்ளியில் மாணவர் அலைபேசி பயன்படுத்த தடை பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்
பள்ளியில் மாணவர் அலைபேசி பயன்படுத்த தடை பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்
ADDED : செப் 20, 2025 11:30 PM
திருவாடானை: பள்ளிகளில் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்தினால் பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த தடையையும் மீறி மாணவர்கள் அலைபேசி பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க பள்ளிக் கல்வித்துறை தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
திருவாடானை தாலுகாவில் 50 க்கும் மேற்பட்ட நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பள்ளியில் மாணவர்களின் சிந்தனைத் திறனை அழிக்கும் அலைபேசி பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிகளில் அமைதியான சூழலை உருவாக்கவும், மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல், ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும், பள்ளி சுற்றுப்புற சூழல் சிறந்து விளங்கவும், பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு வகையான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் மகிழ் முற்றம் குழு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் சில மாணவர்கள் அலைபேசி பயன்படுத்துவது தற்போது தெரிய வந்துள்ளது. அதை தலைமை ஆசிரியரோ அல்லது பிற ஆசிரியரோ பறிமுதல் செய்து மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.