/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாணவர்களை கவரும் தின்பண்டங்களால் உபாதை மாணவர்களை கவரும் தின்பண்டங்களால் உபாதை
மாணவர்களை கவரும் தின்பண்டங்களால் உபாதை
மாணவர்களை கவரும் தின்பண்டங்களால் உபாதை
மாணவர்களை கவரும் தின்பண்டங்களால் உபாதை
ADDED : அக் 07, 2025 03:43 AM
சாயல்குடி: பள்ளி மாணவர்களை கவரும் விதத்தில் செயற்கையாக நிறமூட்டப்பட்ட தின்பண்டங்களை சாப்பிடுவதால் மாணவர்கள் தொடர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சோளமாவில் அஜினமோட்டோ மற்றும் அதிக செயற்கை நிறமூட்டப்பட்ட, பொறிக்கப்பட்ட தின்பண்டங்கள் பாக்கெட்டுகளில் அனைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
காலை, மாலை நேரங்களில் பள்ளி முடித்தவுடன் ஆர்வமாக வாங்கிச் செல்லும் மாணவர்கள் அவற்றை சாப்பிடும் பொழுது உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது.
பசியின்மை, அஜீரண கோளாறு, உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படும் பொழுது கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படு கிறது.
எனவே பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்கள் செயற்கை முறையில் அடைத்து குறைந்த விலையில் விற்கப்படும் உணவு பதார்த்தங்களை சாப்பிடுவது குறித்த உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


