/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தெருக்களில் கழிவு நீரால் துர்நாற்றம்தெருக்களில் கழிவு நீரால் துர்நாற்றம்
தெருக்களில் கழிவு நீரால் துர்நாற்றம்
தெருக்களில் கழிவு நீரால் துர்நாற்றம்
தெருக்களில் கழிவு நீரால் துர்நாற்றம்
ADDED : பிப் 12, 2024 04:39 AM
சிக்கல்: சிக்கல் ஊராட்சியில் வாறுகால் வசதியின்றி தெருக்களில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றத்தினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சிக்கல் ஊராட்சியில் பள்ளிவாசல் தெரு, மேற்கு, வடக்கு மற்றும் சப்பானி கோயில் தெரு உள்ளிட்டவைகள் உள்ளன. சிக்கல் - சொக்கனை செல்லும் சாலையில் வீடுகளில் வாறுகால் வசதி அமைக்கப்பட்டதால் சாலையின் நடுவே கழிவு நீர் தேங்கி குளம் போல் காட்சி தருகிறது.
பெரும்பாலான தெருக்களில் கழிவுநீர் செல்வதற்கான இணைப்பு இல்லை.
இதனால் வெயில் காலங்களிலும் கூட தெருக்களில் கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளது. கழிவு நீரால் சுகாதாரக் கேடும் கொசுக்கள் உருவாகி வருவதால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே சிக்கல் ஊராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீர் வாறுகால் வசதி இல்லாத தெருக்களில் முறையான வாறுகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.