/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் பகலில் எரியும் தெரு விளக்குகள்: வீணாகும் மின்சாரம் பரமக்குடியில் பகலில் எரியும் தெரு விளக்குகள்: வீணாகும் மின்சாரம்
பரமக்குடியில் பகலில் எரியும் தெரு விளக்குகள்: வீணாகும் மின்சாரம்
பரமக்குடியில் பகலில் எரியும் தெரு விளக்குகள்: வீணாகும் மின்சாரம்
பரமக்குடியில் பகலில் எரியும் தெரு விளக்குகள்: வீணாகும் மின்சாரம்
ADDED : ஜூன் 08, 2025 05:07 AM

பரமக்குடி பரமக்குடி நகராட்சியில் பகல் நேரங்களில் தெரு விளக்குகள் எரியும் நிலையில், இரவு நேரங்களில் எரியாமல் இருள் சூழ்வதால் மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. மேலும் விரிவு படுத்தப்பட்ட பகுதிகளில் ஏராளமாக வீடுகள் உருவாகியுள்ளன.
இந்நிலையில் ஒவ்வொரு தெருவிலும் குழல் மின் விளக்குகள் இருந்தன. இவை தற்போது எல்.இ.டி., விளக்குகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் தானியங்கி சுவிட்சுகள் அமைக்கப்பட்டுள்ளதால் மாலையில் எரியும் விளக்குகள் காலையில் தானாக நின்றுவிடும். ஆனால் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு தெருவிலும் காலை நேரங்களில் மின்விளக்குகள் பளிச்சிடுகிறது.
மேலும் இரவு நேரங்களில் எரியாத சூழலால் தெரு நாய்கள் மற்றும் சமூகவிரோதிகள் அச்சத்துடன் மக்கள் பயணிக்கின்றனர். இதேபோல் ஆர்ச் பகுதி தொடங்கி ஐந்து முனை ரோடு மதுரை, மண்டபம் ரோட்டில் மின்விளக்குகள் போதிய அளவு இல்லாமல் உள்ளதுடன் பல விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது.
ஆகவே பகல் நேரங்களில் எரியும் விளக்குகளால் பயனின்றி உள்ளதுடன் மின் கட்டணமும் வீணாகிறது. ஆகவே மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் இவற்றை சீர் செய்வதுடன், இரவில் அனைத்து மின்விளக்குகளும் எரிய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.