/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ திட்ட முகாம் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ திட்ட முகாம்
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ திட்ட முகாம்
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ திட்ட முகாம்
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ திட்ட முகாம்
ADDED : செப் 20, 2025 11:31 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் துவக்கி வைத்தார். மாவட்ட சுகாதார அலுவலர் அர்ஜுன் குமார், தி.மு.க., நகர் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். முகாமில் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை பிரிவு, எலும்பு முறிவு, தோல், நரம்பியல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் சிவானந்த வள்ளி, வட்டார மருத்துவ அலுவலர் முனீஸ்வரி, பேரூராட்சி தலைவர் மவுசூரியா, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, டாக்டர்கள் சஞ்சீவ் குமார், ஹாரூன் ரஷீத், ராஜ வசந்தகுமாரி, ஆனந்த், சியாமளா, சுகாதார மேற்பார்வையாளர் சிவராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.