/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புனித அந்தோணியார் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் புனித அந்தோணியார் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
புனித அந்தோணியார் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
புனித அந்தோணியார் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
புனித அந்தோணியார் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஜூன் 02, 2025 10:30 PM

கமுதி: கமுதி புனித அந்தோணியார் சர்ச் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கமுதி மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் சர்ச் 300 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டு தோறும் ஜூன் மாதம் தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டில் தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
கமுதி பாதிரியார் அம்புரோஸ் லுாயிஸ், இருதயபுரம் பாதிரியார் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தனர். இதனை முன்னிட்டு கிராமத்தில் முக்கிய வீதிகளில் அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
பின்பு அருப்புக்கோட்டை பங்கு தந்தை பாக்கியம் கொடியை ஏற்றினார். சிறப்பு திருப்பலி நடந்தது. ஜூன் 13ல் கமுதி முக்கிய வீதிகளில் தேர் வீதி உலா, ஜுன் 14ல் அந்தோணியார் தெருவில் தேர் வீதி உலா, ஜூன் 15ல் கர்த்தநாதசாமி நினைவு அசன வைபவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பரத உறவின் முறையினர் செய்தனர்.