ADDED : பிப் 11, 2024 12:12 AM
கீழக்கரை: -கீழக்கரை அருகே தென்பொதிகை தமிழ் மாமுனிவர் அகத்தியர் கோயில் உள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு மூலவர் அகத்தியருக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட 16 வகை அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
கோயில் வளாகத்தில் யாக வேள்வி வளர்க்கப்பட்டு உலக நன்மைக்கான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகத்தியர் கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.