ADDED : மார் 23, 2025 03:56 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி, சந்தீஷ் ஆய்வு செய்தார். போலீஸ் ஸ்டேஷனில் உள்ள துப்பாக்கி உள்ளிட்ட போலீசார் கையாளும் ஆயுதங்கள், வழக்குகளின் விவரங்கள் அடங்கிய பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் காவலர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து கேட்டறிந்தார். ஆர்.எஸ்.மங்கலம் ஏ.எஸ்.பி., பயிற்சி தனுஷ் குமார், திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் உடன் இருந்தனர்.